puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 27 நவம்பர், 2012

ஆணவம் செருப்பு மாதிரி, அது காலுக்கு கீழ தான் இருக்கணும் - தளபதி பஞ்ச்


ஆணவம் செருப்பு மாதிரி, அது காலுக்கு கீழ தான் இருக்கணும் - தளபதி பஞ்ச்

மனத்தாழ்மை

ஒரு பெரிய கர்வாலி மரமும் ஒரு சிறிய புல்லின் கதையும் கேள்வி பட்டு இருப்பீர்கள்.. அந்த மரம் சொல்லிச்சாம் புல்லை பார்த்து "ஏய் அற்ப புல்லே, நீ இப்பிடி பெலன்னில்லாம நிலையில்லாம குட்டியா இருக்கியே என்னை பாரு நான் எவ்வளவு பெரிய மரமா வளர்ந்து போய் இருக்கன் என்று பெருமை அடிச்சு கொண்டது..

புல்லும் தனக்கு இப்படி எதிர்த்து திருப்பி சொல்ல தன்னிடம் எதுவும் இல்லாத படியால பேசாம இருந்திச்சு..

ஒரு நாள் ஒரு பலத்த புயல் வீச இந்த பலம் வாய்ந்த கர்வாலி மரம் ஆட தொடங்கியது. தன்னால முடிஞ்சா வரை நேராக நிற்க முயன்றும் காற்றின் வேக மிகுதியில் அது அடியோடு சரிந்து விழுந்தது.. ஆனால் சிறிய புல்லோ அப்படியே நின்றது. 



அதை கண்ணுற்ற கர்வாலி மரம் "ஒ சிறிய புல்லே!  அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலே புயல் காற்றுக்கு நிற்க முடியாமல் போயிடு ஆனால் உன்னால் எப்படி?

அதற்க்கு புல் புன்முறுவலுடன் "நண்பா அது மிகவும் எளிது.. காற்றும் புயலும் வீசும் போது நான் தலை குனிந்து விடுவேன் ஆகவே எனக்கு மேலாக அது கடந்து போய் விடும்"

நண்பர்களே மேலே கூறிய கர்வாலி மரமா நாம் அல்ல புல்லா நாம்???

எமது பெருமை அடியோடு சாய்க்க வல்லமை உள்ளது என்பதை தான் மேலே உள்ள கதை காட்டுகிறது.. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு பிளஸ் உண்டு என்பதை அந்த மரம் ஏனோ அறிய அதன் பெருமை விடவே இல்லை..

கண்டிப்பாக நண்பர்களே எம்மை நாம் தாழ்த்தா  விட்டால் நமக்கு நாமே பெரியவர்களாய் எண்ணி கொண்டு இருப்போம்.. எமது குறைகள், தவறுகள் இருந்தாலும் எமது கடந்த கால வெற்றிகள் இந்த குறைகள் எல்லாம் குறையே இல்ல என்ற பிரமையை வாழ்கையில் தந்து விடும்..

எப்போதும், எந்த நிலையிலும் ஒரு கணம் நமது நிலையினை சோதனை செய்து பார்கிறவர்களாக நாம் இருப்போம்..

பெருமையில் நாம் நம்மை உயர்த்தும் போது கண்டிப்பாக நமக்கு அடுத்தவனை நேசிக்க முடியாது.. உண்மையான அன்பை காட்ட முடியாது..


உலகத்தின் உண்மையான சந்தோசமே இன்னொருவர் மீது அன்பு காட்டுவது என்பதை
அனுபவித்தவர்கள் அறிந்து இருப்பார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக