puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 27 நவம்பர், 2012

தமிழ் டாப் 10 பஞ்ச் டயலாக்


தமிழ் டாப் 10 பஞ்ச் டயலாக்

இது ஒரு நடுநிலையான ஒரு தளத்தால் (????) தரவரிசை படுத்த பட்டது. எனக்கு பிடித்த பஞ்சை இன்னொரு நாள் பார்ப்போம். (இவன் நம்மள விட மாட்டான் போல இருக்கே.. பழகுற பாவத்திற்கு எவ்வளவெல்லாம் தாங்க வேண்டி இருக்கு.. டாப் டென்னா போட்டே கொல்றானே) ஐ கேட்ச் யுவர் மைன்ட் வாய்ஸ் பிரெண்ட்ஸ்..

 10. "மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி"

இது பி. எஸ். வீரபாவினால் ஆக்ரோசமாக மந்திரி சபையிலே இளவரசி சாவிதிரிக்காக கூறப்பட்டது.. படம் பெயர் தெரிந்தால் யாராவது கூறுங்கள்..

09. "சபாஷ் சரியான போட்டி"

இது கூட பி. எஸ். வீரபாவினால் கூறப்பட்டது. வைஜெயந்தி மாலா மற்றும் பத்மினிக்கும் இடையிலே நடன போட்டி நடக்கையில் கூறப்பட்டது.. திரைப்படம் வஞ்சிகோட்டை வாலிபன்..

08. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. திருவிளையாடல் படத்துல சிவாஜி சொல்லுவாரு.

ரஜினி


07. "நீ முந்தினா நோக்கு நான் முந்தினா நேக்கு"

வியட்நாம் வீடு படத்திற்க்காக சிவாஜியால் சொல்ல பட்டது..

06. "பரட்டை பத்த வைச்சுட்டியே பரட்டை"

இது 16 வயதினிலே படத்திற்காக கூறப்பட்டது. இந்த படத்திலே ரஜினியின் "இது எப்பிடி இருக்கு" என்ற செம பஞ்சும் இருக்கு.. படு பாவிங்க இத போட்டு இருக்காய்ங்க..

05. "மாப்பு வைச்சுட்டியே ஆப்பு"

இது ரொம்ப வயிறு நோக சிரிச்ச வடிவேலு காமெடி பஞ்ச்.. சந்திரமுகி படத்திற்காக..

ரஜினி


04. "கடவுளே கடவுளே"

இது கூட காமெடி தான் ரஜினி குஷ்பூவினால் அண்ணாமலை படத்தில் சொல்லப்பட்டது.. 

03. "நீங்க நல்லவரா கெட்டவரா"

இது கமலின் பஞ்ச். சொல்லவே தேவல இது எவ்வளவு பேமஸ் என்று..

02. "மன்னிப்பு, தமிழ்லயே எனக்கு பிடிக்காத வார்த்தை"


இது மட்டும் இல்லாட்டி அந்த ரேடிங்க நான் கூட மன்னிச்சு இருக்க மாட்டன்..

01. "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"

இத பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்ல என்று நினைக்கிறன்..




தலைவர விட்டுபுட்டிங்கலே பா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக