puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 27 நவம்பர், 2012

2012 தமிழ் டாப் 10 பாடல்கள் (ஜன - ஜூன்)


2012 தமிழ் டாப் 10 பாடல்கள் (ஜன - ஜூன்)

2012 தமிழ் டாப் 10 பாடல்கள் (ஜன - ஜூன்)

 இந்த வருடம் ஜனவரி டு ஜூன் வரை வெளியான படங்களில் இருந்து எனக்கு பிடித்த பாடல்களை வரிசை படுத்தி உள்ளேன்.. 

முதலில் இந்த வருடம் நான் கேட்ட பாடல்கள் குறைவு. இருந்தாலும் இவை தவிர ஒரு சில பட பாடல்களே ஹிட் ஆகி இருக்கின்றன என்று நினைக்கின்றேன்..

இந்த வருடம் பெரிய மியூசிக் ஹிட் என்று அதிக படங்கள் பேச பட முடியாமல் இருப்பது ஒரு இசை வறட்சி போல தான் உள்ளது.

சரிங்க ரேடிங் உள்ள போகலாம்.

.





10. வேட்டை
பாடல் - கட்டிபுடி
இசை - யுவன்
பாடியவர்கள் - விஜய் பிரகாஷ், ஸ்வேதா பாண்டித்

இந்த பாடலை பற்றி பெருசா சொல்ல ஒன்னுமில்லைங்க.. படத்தின் காட்சி அமைபிட்காக பிடித்த பாடல்.. இந்த பாடலில் ஆர்யா அமல பாலை அருகில் கண்டு இருந்தால் அபிடியே ஷாக் ஆகி இருப்பார்.. யப்பா என்னா மேக் அப் டா சாமி.. மேலும் சில நடன அசைவுகள் சூப்பர்..




09. அரவாண்
பாடல் - நிலா நிலா போகுதே
இசை - கார்த்திக்
வரிகள் - நா. முத்துகுமார்

படத்தின் முதல் பாதி போல இந்த பாடலும் செம கலக்கல்.. வீடியோ பார்க்காமல் அப்பிடியே ஜன்னலோரம் அமர்ந்து இருந்து காதிலே ஹெட் செட் போட்டு கேட்டால் செமையாக இருக்கும்.. வீடியோ கூட அருமையான காட்சி படுத்தல்கள்.. புது இசையமைப்பாளர் கார்த்திக் வாழ்த்துக்கள்..




08. கலகலப்பு
பாடல் - மொக்கமனிஷா
இசை - விஜய் எபெனேசர்
வரி - பா . விஜய்

இந்த பாடல் ஏன் பிடித்தது என்று தெரியவில்லை.. அடிச்சு துவைச்சு காதை கூட துவம்சம் பண்ணி இருப்பார்கள் இசையால்.. அக்கா சுசித்ராவின் குரல்  பளிச்.. மற்ற படி சூப்பர் கலகலப்பான கலப்பு பாடல்..




07. முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடல் - ஓ சுனந்தா
இசை - G .V .பிரகாஷ்
பாடியவர்கள் - ராமன் மகாதேவன் , கார்லின், மேக
வரி - தாமரை

இது எனக்கு மட்டுமல்ல  அநேகருக்கு மிகவும் பிடித்த அல்பம் என்று கூட சொல்லலாம். பாடல்கள் ஆடியோ, வீடியோ என சக்கை போடு போட்டன.. இந்த திரைபடத்தில் உள்ள யார் அவள் யாரோ பாடல் கூட சூப்பர் காட்சி அமைப்பு + இசையமைப்பு.. அழகான காதலை சொல்லும் அழகான பாடல்கள்..





06. மனம் கொத்தி பறவை
பாடல் - ஊரான ஊருக்குள்ள
இசை - இமான்
பாடியவர் - சந்தோஸ்

பாடல் முக்கியமாக படத்தின் ஆரம்ப நொடியில் இருந்து கடைசி வரை நான் ரசித்த பாடல்.. இதில் முக்கியமான விடயம் எனக்கு மிகவும் பிடித்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் சந்தோஸ் பாடிய பாடல்.. மிக அற்புதமான இசை.. சிவா கூட நடனத்தில் கலக்கி இருப்பார்.. படத்தில் மற்ற பாடல்கள் ஜல் ஜல், டங் டங்  கூட பலரை கவர்ந்த பாடல்கள் தான்..



05. சகுனி
பாடல் - போட்டது பத்தல
இசை - G .V . பிரகாஷ்
பாடியவர் - வேல்முருகன்

ஒரு பாடல் கேட்டவுடன் பிடித்ததென்றால் அது கண்டிப்பாக இந்த பாடல் தான்.. ஏகப்பட்ட பழைய பாடல்கள் ஒவ்வொரு மெட்டிலும் வந்து போனாலும் இதை அடிகடி நாம் அனுபவிப்பதால் இப்ப எல்லாம் வலிப்பதே இல்லை.. ஆடியோ கொடுத்த தாக்கத்தை வீடியோ ஓகே சொல்ல வைத்தது.. ஆனாலும் கார்த்தி ஏன் விபரித்த முயற்சியை பாடல்களில் எடுத்தாரோ தெரியவில்லை.. அந்த இடங்களை தவிர பாடல் சூப்பர்.. மேலும் இந்த படத்தில் வெள்ளை பம்பரம், மனசெல்லாம் மழையே போன்ற மெல்லிய பாடல்களும் இருக்கின்றன..



04. கழுகு
பாடல் - ஆம்பிளைக்கும்
இசை - யுவன்
பாடியவர்கள் -கிருஸ்ணராஜ், வேல்முருகன், சத்தியன்
வரி - சிநேகன்

அட ஆமாப்பா போட வைத்த வரிகள் சுமந்து வந்த பாடல்.. செம குத்து, செம டான்ஸ், செம வரி.. ஒவ்வொரு வரியும் செம நக்கல்ஸ்ஸோட எழுதப்பட்டு இருக்கும்.. கொஞ்ச நாள் இளைஞர்களின் ரிங் டோனாய் இந்த பாடல் வலம்
வந்தது..


 




03. ஓகே ஓகே
பாடல் - வேணாம் மச்சான்
இசை - ஹாரிஸ்
பாடியவர்கள் - நரேஷ் ஐயர், வேல்முருகன்
வரி - முத்துக்குமார்

இது கூட முழுமையாக கவர்ந்த அல்பம் தான்.. படத்தில் அகிலா அகிலா, காதல் ஒரு BUTTERFLY போன்ற பாடல்களும் வீடியோவை விட ஆடியோவில் செமையாக இருக்கும்.. ஏற்கனவே எதிர்பார்ப்பில் இருந்த படம் பாடல்களும் தாறுமாறா ஹிட் ஆக இன்று வரை இந்த வருடத்தின் நம்பர் 1 படமாக இருந்து வருகிறது.






02. 3
பாடல் - போ நீ போ
இசை - அனிருத்
பாடியவர்கள் - மொஹிட் சுஹான் , அனிருத்
வரி - தனுஸ்

வை திஸ் கொலைவெறி வீடியோ ஆக வந்து மக்களை கொலைவெறி ஆக்கியதில் மற்ற பாடல்கள் தப்பி கொண்டது பெரிய விடயம்.. உண்மையில் இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் அல்பம் இது என்று கூறலாம்.. தமிழ் பாடல் ஒன்றை  (தமிழா.. ஏதோ உளர்ரன் விடுங்க) உலக அளவில் ஹிட் ஆக்கி படத்திற்கு பெரிய நடிகர்களுக்கே இல்லாத ஒரு எதிர் பார்ப்பை தோற்றுவித்ததில் பாடல்களுக்கு மிக பெரிய பங்குண்டு.. பாடல் வரிகள் கூட நச் கவிதைகள்..






01. நண்பன்
பாடல் - அஸ்க்கு லஸ்க்கு
இசை - ஹாரிஸ்
பாடியவர்கள் - விஜய் பிரகாஸ், சின்மயி
வரி - கார்க்கி

சந்தேகமே இல்லாமல் இந்த வருடம் நான் அதிகம் போட்டு தேய்த்த பாடல்கள்.. வித்தியாசமான காதல் அறிமுகங்கள், வித்தியாசமான இடங்கள், 4 வகை இசை இணைப்பு என்று பாடல் என் மனசில் ரொம்பவே கல்லா கட்டி விட்டது.. இந்த பாடல்களில் கூட "எங்கேயோ கேட்ட மயக்கம்" இருந்தாலும் என்னுடைய காதுகள் இசைவாக்கம் அடைந்து போனதால் ஒன்றுமே பண்ண முடியவில்லை.. வருடத்தின் அட்டகாசமான ஆரம்பத்தை விஜய், ஷங்கர் ஏற்படுத்தி இருந்தார்கள்..






நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக