puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 27 நவம்பர், 2012

குழந்தைங்களா இதுங்க - நகைச்சுவை கலாட்டா


குழந்தைங்களா இதுங்க - நகைச்சுவை கலாட்டா

குழந்தை நலம் -1

குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும்.



பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை எனில் ,உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும் பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.

சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் அதிவேகத்தில் நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். குழந்தை நடப்பதற்குத் தயாராக இல்லாத தருணத்தில்,குழந்தையை நடக்கச் சொல்லி வலுக்கட்டாயமாகப் பயிற்சி கொடுத்தல் எந்தவித பலனையும் தராது.
 
 
குழந்தை வளர்ச்சி நிலைகள்
 
  • 2 மாதங்கள் – புன்சிரிப்பு,லேசான சிரிப்பு
  • 4 மாதங்கள் - கழுத்து நிற்பது,கை,கால்களை சிறித்ளவு அசைக்கும்
  • 8 மாதங்கள் - எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்
  • 12 மாதங்கள் - எழுந்து நிற்பது
பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்
 
  • தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்கொண்டு இருக்கும்.
  • திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல்.
  • கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல்.
  • குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.
  • குழந்தையிடம் ஏதாவது பொருள்,கைகளை கொடுத்தால் அவை தன்னுடைய உறுப்பால் ஒன்று என நினைத்துக் கொள்ளும்.
6 முதல் 12 வாரங்கள்
 
  • குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
  • பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
  • குழந்தை திடீரென அழுகும்

3 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
  • மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
  • குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
  • குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
  • குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
  • அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. 

நன்றி - INDIAN DEVELOPMENT GATEWAY


நகைச்சுவை கலாட்டா 







நன்றி - முகபுத்தகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக