puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

சனி, 13 அக்டோபர், 2012

Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]


Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]



"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.

Youtube தளம் நம் வீடியோக்களை பகிர்வதற்கு நமக்கென்று தனி சேனல் தருகிறது. அதில் நம் படங்களை பகிரலாம். பகிர்வது மட்டுமின்றி, கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுத்து, அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியையும் தருகிறது யூட்யூப்.

விளம்பரம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள்:

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அனுமதிக்கப்படாத வீடியோக்கள்:

1. வர்த்தக உரிமம் (Commercial license) இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்துவது.

2. காப்புரிமைப்பெற்ற பாடல்களை நீங்களோ அல்லது வேறு யாரோ பாடும் வீடியோக்கள்.

3. நீங்கள் விளையாடும் "வீடியோ கேம்களை" வீடியோவாக எடுப்பது.

4. காப்புரிமை இல்லாத மென்பொருள்களின் செயல்பாடுகளை படமாக்கப்பட்ட வீடியோக்கள்.

Youtube விளம்பரத்தில் இரண்டு கணக்குகள் உள்ளன. Youtube Monetization மற்றும் Youtube Partnership.

Youtube Monetization என்பது நாம் அனைவரும் எளிதாக பெறக் கூடிய கணக்கு. இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்ற வீடியோவைத் தான் பார்க்கப் போகிறோம்.





வீடியோவில் சொன்னது போல Monetization-ஐ ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு இருக்க வேண்டும். ஆட்சென்ஸ் கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை, உங்கள் யூட்யூப் சேனலுக்காகவே புதிய கணக்கு பெறலாம்.

ஆனால்  அந்த ஈமெயில் ஐடிக்கு ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருக்கக் கூடாது, அல்லது ஆட்சென்ஸ் கணக்கு முடக்கப்பட்டிருக்கக் கூடாது.

Youtube Monetization வசதி சில நாடுகளுக்கு இல்லை. நான் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கடந்த வாரம் போல தான் இந்த வசதி வந்தது.

"யூட்யூப் விளம்பரம் மூலம்ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம்" என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்து உள்ளது.

இது பற்றிய விரிவான விளக்கத்தை கற்போம் தளத்தில் Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற பதிவில் பார்க்கலாம்.


ஆமாம்! பதிவில் Youtube Partnership என்று இருக்கிறதே? அப்படியென்றால் என்ன....?  


bloggernanban. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக