Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]
"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.
Youtube தளம் நம் வீடியோக்களை பகிர்வதற்கு நமக்கென்று தனி சேனல் தருகிறது. அதில் நம் படங்களை பகிரலாம். பகிர்வது மட்டுமின்றி, கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுத்து, அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியையும் தருகிறது யூட்யூப்.







