puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

300க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து இலவசமாக வீடியோ டவுன்லோட் செய்ய


300க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து இலவசமாக வீடியோ டவுன்லோட் செய்ய

download  videos from above 300 websites 

வணக்கம் நண்பர்களே..!

வீடியோவின் பயன் எந்தளவுக்கு சிறந்தது என்று உங்களுக்குத் தெரியும். இணையத்தில் காணப்படுகின்ற வீடியோக்களை தரவிறக்கம் செய்ய அனைத்து தளங்களிலும் அதற்கான தரவிறக்கச்சுட்டியை வைத்திருக்கமாட்டார்கள்.
all video downloader for free
இவ்வாறான தளங்களில் வீடியோக்களை டவுன்லோட் செய்யவேண்டுமெனில் மாற்று மென்பொருள்களைப் (video download software) பயன்படுத்த வேண்டும். இணையத்தில் நிறைய வீடியோ டவுன்லோடர் மென்பொருள்கள் கிடைத்தாலும், ஒவ்வொரு மென்பொருளும் ஒரு குறிப்பிட்ட வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும். அவ்வாறில்லாமல் அனைத்து வீடியோக்களை தரவிறக்கம்(all video download) செய்ய வசதிகளை உள்ளடக்கியுள்ளது இந்த மென்பொருள்.

மென்பொருளின் பெயர்: ஆல்வீடியோ டவுன்லோடர் (All Video Downloader)

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் பல வீடியோக்களை டவுன்லோட் செய்வதுதான் இந்த மென்பொருளின் சிறப்பு.

all video downloader
all video downloader

ஆல் வீடியோ டவுன்லோடர் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய:
நன்றி.

.thangampalani. thanks

பிளாக்கரில் இணைப்புகள் அனைத்தையும் புதிய விண்டோவில் திறக்க


பிளாக்கரில் இணைப்புகள் அனைத்தையும் புதிய விண்டோவில் திறக்க

வணக்கம் நண்பர்களே..! பிளாக்கர் டிப்ஸ் எழுதுவதென்பது இன்று பல பிளாக்கர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. நல்ல புரிதல்களுடன் புதிய வாசகர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுபவர்கள் ஒரு சிலரே. நம்முடைய தங்கம்பழனி வாசகர் ஒருவர் பிளாக்கர் தளத்தில் ஒவ்வொரு இணைப்பையும் கிளிக் செய்யும்போது அடுதடுத்த புதிய விண்டோவில் திறக்கச் செய்ய வேண்டும் என்ன செய்யலாம்? என்று கேட்டிருந்தார். இதோ அவருக்கான பதில்..
Open blog links in new window
பிளாக்கரில் லிங்க் புதிய விண்டோவில் திறக்க
உங்கள் பிளாக்கர் உள்ள ஒவ்வொரு இணைப்பையும் கிளிக் செய்யும்போது உங்களுக்கு புதிய விண்டோவில் திறக்கச் செய்ய எளிய முறை ஒன்று உள்ளது.

உங்கள் பிளாக்கர் Dashboard சென்று Design==>Edit HTML==> செல்லுங்கள்.
இப்போது திறக்கும் வார்ப்புரு நிரலில் <head> என்பதை தேடுங்கள்.

அதற்கு கீழே வருமாறு கீழுள்ள நிரல்வரித்துண்டை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடுங்கள்.
<base target='_blank'/>

அதாவது இப்படி இருக்க வேண்டும்.
<head> 
<base target='_blank'/>

இப்போது இறுதியில் உள்ள Save Template என்பதனைச்சொடுக்கி செய்த மாற்றத்தினை சேமித்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

இந்த முறையானது ஒரு பக்கம் திறக்க அதிக நேரமெடுப்பதாக இருப்பின், அந்த இணைப்பை கிளிக் செய்துவிட்டு, முழுவதும் திறக்கும் வரை காத்திருக்காமல் வேறு பக்கத்தை பார்வையிடலாம்.

இனி நீங்கள் உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கும்போதும் ஒவ்வொரு இணைப்பும் புதிய விண்டோவில் திறக்கும்.

இந்த முறையையும் நீங்கள் கையாளலாம்.

பிளாக்கர்(blogger) அல்லது ஒரு வலைத்தளத்தில்(websites) நீங்கள் ஒரு இணைப்புப் பக்கத்தை புதிய விண்டோ அல்லது புதிய டேபிள் திறக்க வேண்டும் என நினைக்கும்போது Ctrl பட்டனை அழுத்தியவாறே மௌசால் அந்த இணைப்பை கிளிக் செய்யும்போது இணைப்பானது புதிய டேபில் திறக்கும். (Open in new Window)==> (Ctrl+Click)

புதிய விண்டோவில் இணைப்பைத் திறக்க விரும்பினால் Shift விசையை அழுத்தியவாறே மௌசால் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் சொடுக்கிய இணைப்புப் பக்கமானது புதிய விண்டோவில்(Open in New Window) திறக்கும். Open in New Window==>(Shift+click)


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page



கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page



Google சேவையைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இணையத்தை வளைத்துப் போட்டிருக்கிறது கூகிள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்வதில் கூகிளுக்கு நிகர் கூகிள்தான்.

நீங்கள் கூகிளில் பல்வேறுபட்ட கணக்குகளை வைத்திருந்தால், அவற்றை ஒரே நேரத்தில் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு கணக்கையும் திறந்து பார்க்க வேண்டுமானால் ஒரு கணக்கை logout செய்துவிட்டுதான், வேறொரு கணக்கைத் திறந்து பார்க்க முடியும்.

அல்லது multiple sign in எனும் வசதியைப் பயன்படுத்தியே மற்ற கணக்கைத் திறந்து பார்த்துக்கொள்ள முடியும். இதற்கும் ஒவ்வொரு முறையும் அந்தக் கணக்கைத் திறக்க யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைய வேண்டும்.

தற்போது வரவிருக்கிற புதிய வசதியின் மூலம் இவ்வாறு மற்றொரு கணக்கைத் திறக்க யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. Multiple Accounts login page வசதியின் மூலம் உங்களுடைய மற்ற google accounts களையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் ஒரு முறை கூகிளில் லாகின் செய்தால் போதும். மற்ற கூகிள் கணக்குகளையும் அங்கு காட்டும். தேவைப்படுகிற google account -ல் கிளிக் செய்து அதை திறந்துகொள்ளலாம். இதனால் ஒவ்வொரு முறையும் Username, Password கொடுப்பது தடுக்கப்படுகிறது.
add multiple accounts page in google
add multiple accounts in google

இந்த வசதியைப் பெற நீங்கள் இந்த லிங்கில் சென்று ஆக்டிவேட் செய்துகொள்ளவும்.

இந்தப் பக்கத்தில் உள்ள enable this feature என்ற சுட்டி அழுத்துவதன் மூலம் உங்களுக்கு இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும். அதில் உங்களுடைய மற்ற கூகிள் அக்கவுண்ட்களுக்கான e-mail address கொடுத்து, ஒவ்வொரு அக்கவுண்ட்டாக அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

விருப்பமில்லையெனில் இந்த வசதியை நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும். இந்த பக்கத்தில் தேவையான அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நன்றி..

திங்கள், 24 செப்டம்பர், 2012

உடலுறவை விரும்ப பெண்கள் காமத்தை விட 200 காரணங்கள்!



0 comments

தாம்பத்திய உறவில் ஈடுபட பெண்களைப்பொறுத்தவரை உடல்ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஒரு ஆண், பெண்ணுடனான உறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கடைசி இடம்தானாம்.

பேஸ்புக்கில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை நீக்குவது எப்படி?



பேஸ்புக்கில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை நீக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம். புதியவர்களுக்கு இது மிகவும் பயன்படும் என கருதுகிறேன்.
remove unwanted apps in facebook

1. பேஸ்புக்கில் உங்கள் கணக்கில் உள் நுழைந்துகொள்ளுங்கள்.
2. அதில் Home என்பதற்கு அருகில் இருக்கும் அம்புக்குறியில் கிளிக் செய்தால் இதுபோல தோன்றும்.
3. அதில் Account settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
4. பிறகு இடது பக்கமுள்ள apps என்பதை கிளிக் செய்தால் நீங்கள் இதுவரைக்கும் சேர்த்துவைத்துள்ள Application பட்டியல் காண்பிக்கப்படும்.
5. அதில் தேவையில்லை என நீங்கள் நினைக்கும் அப்ளிகேஷன்களின் அருகில் X குறியை அழுத்துங்கள்.
6. உடனே தேவையில்லாத அந்த பேஸ்புக் அப்ளிகேஷன்கள் நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் Scam Apps நீக்குவது எப்படி? என்பதை வீடியோவில் காணுங்கள்.



எதற்காக அப்ளிகேஷன்கள் நீக்க வேண்டும்? 

மூன்றாம் நபர் வடிவமைத்த Applcationகள் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ் தாக்குதல்களிலிருந்து(Third-Part Application attack), உங்கள் கணினியை காப்பாற்ற இதுபோல தேவையில்லாத அப்ளிகேஷன்களை நீக்க வேண்டியதிருக்கிறது.

பிரச்னை தரக்கூடிய Yahoo, Daily Motion போன்ற அப்ளிகேஷன்களை நீங்கள் நிறுவியிருந்தால் அதை நீக்கிவிடுங்கள்.

நாம் மட்டும் பயனடைந்தால் போதுமா? நண்பர்களுக்கும் இதை தெரியபடுத்த வேண்டாமா? உங்கள் பேஸ்புக்கில் இப்பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்.

தீங்கு தரும் பேஸ்புக் அப்ளிகேஷன்களைப் பற்றி பேஸ்புக்கிலேயே புகார் அளிக்கலாம். 

report thirdpart application in face book
இவ்வாறு தீங்கு தரும் அப்ளிகேஷன்கள் மற்றவர்களையும் பயன்படுத்தாமல் தடுக்க பேஸ்புக்கில் புகார் அளிக்கலாம். அதற்கு கீழிருக்கும் முகவரிக்கு செல்லுங்கள்.

Report Apps

1. இங்கு தோன்றும் பக்கத்தில் கீழாக ReporApps என்ற சுட்டி இருக்கும்.
2. அதில் அழுத்தி தோன்றும் பக்கத்தில் I'm reporting apps for the spam என்பதை தேர்ந்தெடுங்கள்.
3. நீங்கள் விருப்பபட்டால் அந்த அப்ளிகேஷனுக்குரிய Screen shot எடுத்து இணைத்துக்கொள்ளலாம்.
4. இறுதியாக கீழிருக்கும் Submit பட்டனை சொடுக்கியவுடன் நீங்கள் அளித்த புகார் பேஸ்புக்கிற்கு சென்றுவிடும்.

இவ்வாறு புகார் அளிப்பதால் அந்த அப்ளிகேஷனை நீக்குவதற்கான ஏற்பாடுகளை பேஸ்புக் செய்யும்.

பேஸ்புக் அப்ளிகேஷனைப் பற்றி புகார் அளிப்பது எப்படி என்பதை வீடியோவில் காணுங்கள்
நன்றி நண்பர்களே..!

- தங்கம்பழனி

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!


பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!

REFRIGERATOR TIPS,,,
அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால் பதிவுகளை பற்றி நினைக்க மட்டுமே முடிந்தது, இன்று என்னால் முடிந்த பதிவு.

நம் வீட்டில் கண்டிப்பாக அனைவரும் குளிர்சாதன பெட்டி வைத்திருப்போம், அதனை பராமரிப்பது பற்றி சிறு தகவல்கள். முடிந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 


1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

அன்புடன் கதிரவன்  

உங்கள் வீட்டிற்கு இலவசமாய் A/C வேண்டுமா?


உங்கள் வீட்டிற்கு இலவசமாய் A/C வேண்டுமா?

அன்பர்களுக்கு வணக்கம், நாளுக்கு நாள் உலக வெப்ப மயமாதல் அதிகமாகிக் கொண்டே போகிறது, கோடைக் காலங்களில் வீடுகளில் உட்காரவே முடிவதில்லை, அதிலும் மின்வெட்டு நேரங்களில் என்னதான் UPS உபயோகித்தாலும் பாம் வெடிப்பதற்கு கவுண்ட்  டவுன் இருப்பதை போல எப்ப சார்ஜ் குறையும்னு பார்த்துகிட்டே இருக்கனும்.